Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம கடுப்புல எழுதுன ரவிமோகனின் அந்த பாடல்.. பாட்டு எந்தளவு ஹிட் தெரியுமா?

Advertiesment
Ravi mohan

Bala

, செவ்வாய், 11 நவம்பர் 2025 (16:24 IST)
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரவிமோகன். இப்போது தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். அவரது தயாரிப்பில் அடுத்தடுத்து படங்கள் வரிசையில் நிற்கின்றன. ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரவிமோகன் தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்து வந்ததனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு என தனி இடம் கிடைத்தது.
 
சினிமாவில் நுழைந்து தொடர்ச்சியாக மூன்று படங்கள் ஹிட் கொடுத்த முதல் நடிகர் ரவிமோகன் தான். நடிப்பு, நடனம் என பன்முகத்திறமைகள் வாய்க்கப்பெற்றவர். பரத நாட்டியம் இவருக்கு அத்துப்பிடி. எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் கூட பரத நாட்டியம் டிரை பண்ணியிருப்பார். அந்தப் படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த வகையில் ஐயோ ஐயோ பாடல் குறித்து பாடலாசிரியர் யுக பாரதி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
 
அதாவது  முதலில் கண்டேன், கண்டேன் உன் கண்கள் நான் கண்டேன் என்றுதான் எழுதி கொடுத்தாராம் யுகபாரதி. இந்தப் பாடல் மிகவும் இலக்கியமாக இருக்கிறது. டிரெண்டிங்கா வேண்டும் என இயக்குனர் கேட்டிருக்கிறார். உடனே கடுப்பில் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐய்யய்யோ என எழுதி கொடுத்தாராம்.அதன் பிறகு அந்த பாடல் செம டிரெண்டியா இருக்குனு சொல்லியிருக்காங்க. பின் அந்தப் பாடலும் செம ஹிட் என யுகபாரதி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
 
அந்தப் பாடலை படமாக்கிய விதமும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக ரவிமோகன் மற்றும் அசின் கெமிஸ்ட்ரி படத்தில் நல்ல முறையில் வொர்க் அவுட் ஆகியிருக்கும். தற்போது ரவிமோகன் தன்னுடைய குடும்பத்தை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். மனைவியுடனான கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் ரவிமோகன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.
 
இன்னொருபக்கம் அவருக்கு முழு ஆதரவு கொடுத்தும் பக்கம் பலமாகவும் இருந்து வருபவர் அவரது தோழியும் பாடகியுமான கெனிஷா. அவருடைய சப்போர்ட்டில்தான் இப்போது தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் கனி.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 பேர் யார் யார்?