தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், நேற்று இரவு மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் தற்போது நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தந்தை பாரதிராஜாவை போலவே மனோஜும் இயக்குனர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் தான் நடிகர் ஆகவேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்ததால் தன் மகனை தாஜ்மகால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரால் நடிகராக பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் தந்தையை வைத்தே மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார்.
இந்நிலையில் பாரதிராஜாவின் சகோதரரும், நடிகருமான ஜெயராஜ் தனது அண்ணன் பாரதிராஜாவுக்கு, அவரது மகன் பிறந்த அடுத்த நாளில்தான் பதினாறு வயதினிலே படத்தினை இயக்க வாய்ப்பு வந்தது. அந்த மகிழ்ச்சியோடு அவர் சென்னையில் இருந்து மகனைப் பார்க்க தேனிக்கு சென்றார்” எனக் கூறியுள்ளார்.