Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் என்ன பிரச்சனை?.. ஒரு மாதமாக நடந்த சிகிச்சை!

Advertiesment
மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் என்ன பிரச்சனை?.. ஒரு மாதமாக நடந்த சிகிச்சை!

vinoth

, புதன், 26 மார்ச் 2025 (09:25 IST)
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், நேற்று இரவு மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் தற்போது நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் மனோஜ், கடந்த ஒரு மாத காலமாகவே சிகிச்சைப் பெற்று வந்தது தெரியவந்துள்ளது. அவருக்கு இதயத்தில் உள்ள வால்வ்களில் பிரச்சனை ஏற்பட கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக அவருக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ‘இதய வால்வ் மாற்றல்’ அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பின்னர் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். நலமுடன் இருந்த அவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளாகவே அவரது உயிர் பிரிந்துள்ளது. அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் மம்மூட்டிக்கு பெருங்குடல் புற்றுநோயா..? பிரபல நடிகரின் பதிவு!