Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்மர் ஹாலிடேயில் டைனோசரை கூட்டி வருகிறான் சின்சான்! தமிழிலும் ரிலீஸாகும் Shinchan: Our Dinosaur Diary

Advertiesment
Shinchan Movie

Prasanth Karthick

, புதன், 26 மார்ச் 2025 (12:54 IST)

சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள சின்சான் தொடரின் புதிய திரைப்படம் ஒன்றை நேரடியாக தமிழில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஜப்பானிய அனிமெ கார்ட்டூன் தொலைக்காட்சி தொடரான சின்சான் இந்தியாவில் பிரபலமாக உள்ளது. முக்கியமாக தமிழ்நாட்டில் சின்சானுக்கு சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்சான் தொலைக்காட்சி தொடராக மட்டுமல்லாமல் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டு ஜப்பானில் தியேட்டர்களில் வெளியாகி வருகிறது.

 

அவ்வாறாக இந்த ஆண்டு கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக சின்சான், குட்டி டைனோசர் இணைந்து செய்யும் சாகசமான Shinchan: Our Dinosaur story என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை சின்சான் பிரபலமாக உள்ள மற்ற மொழிகளிலும் நேரடியாக டப்பிங் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

இந்தியாவில் சின்சான் பிரபலமாக உள்ளதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்திரன் படத்தில் ரஜினியாக நடித்த மனோஜ்? - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!