கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்களுக்கு விஜய் காரணம் என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெக மீது பல கட்சிகளும் விமர்சனம் வைத்தன. அப்போது பேசிய சீமான், இது ஒரு விபத்து என்றும், இது விஜய்யையே பெரிதும் பாதித்திருக்கும் என்றும் தவெகவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்கள் பேட்டியில் பேசிய சீமான் “தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் முதலில் சேலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஏன் நாமக்கல், கரூருக்கு மாற்றப்பட்டது. கரூர் சம்பவம் நடைபெற முதல் காரணமே விஜய்தான். விஜய் வருவதால்தான் அங்கு அவ்வளவு கூட்டம் கூடி விபத்து ஏற்பட்டது.
ஆனால் விபத்திற்கு காரணமான விஜய் மேல் வழக்குப்பதியாமல் கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதும், புஸ்ஸி ஆனந்த் தனது முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுகிறார். இது சிபிஐ தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கைதானே. விஜய் பாஜகவோடு கூட்டணி அமைக்க மறுத்தால் விஜய் மீது, ஆதவ் அர்ஜுனா மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்யும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K