மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இயக்குனர் கிரிஷ் படத்தின் கதைக்களம் குறித்துப் பேசியுள்ளார்.
இந்நிலையில் இப்போது தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. ஏற்கனவே அதே தேதியில் கார்த்தியின் வா வாத்தியார் படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.