ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துப் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார் கீர்த்தி சுரேஷ். அதே நேரம் தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள நடிகையர் திலகம் மற்றும் சாணிக்காயிதம் மற்றும் ரகுதாத்தா போன்ற படங்களிலும் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தென்னிந்திய சினிமாத் தாண்டி அவர் பாலிவுட்டிலும் பேபி ஜான் படத்தின் மூலம் கால்பதித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்தபடம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் முதல் படத்தில் நடித்த போது நடந்ததைப் பகிர்ந்துள்ளார். அதில் “என் முதல் படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் படப்பிடிப்பின் போது ஒரு காட்சிக்காக என்னைத் திட்டினார். அதற்காக நான் அப்போது அழுதேன். ஆனால் அவர் எல்லோரிடமும் ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார். அவர் மகளைக் கூட அப்படிதான் திட்டுவார்” எனக் கூறியுள்ளார்.