Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ்?

விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ்?

vinoth

, சனி, 19 அக்டோபர் 2024 (13:53 IST)
ஆர் ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை எடுத்து சமீபத்தில் ரிலீஸ் செய்தார் இயக்குனர் கோகுல். அந்த படம் சுமாரான வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படம் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட கொரோனா குமார் திரைப்படம்தான் என தகவல்கள் பரவின. ஆனால் அதை இயக்குனர் கோகுல் தரப்பு மறுத்துள்ளது. மேலும் “கொரோனா குமார் படத்துக்கும் இந்த படத்துக்கும் சம்மந்தம் இல்லை. இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்” எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் கோகுல் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து கோகுல் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்போது விஷ்ணுவிஷால் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

GOAT படம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வசூல் செய்தது எவ்வளவு?.. லியோவை முந்தியதா?