விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் ஷூட்டிங் 20 நாட்கள் கொடைக்கானலில் தொடங்கி நடத்தப்பட்டது. அதன் பிறகு விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் பிஸியானதால் இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இப்போது மீண்டும் இந்த படம் தொடங்கப்பட்ட நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், படத்தில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தை நாயகன் விஷ்ணு விஷாலே தன் பொறுப்பில் ஏற்று தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.