Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

Advertiesment
யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

vinoth

, சனி, 28 செப்டம்பர் 2024 (13:29 IST)
இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது யோகி பாபுவை வைத்து போட் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஒரு படகில் பயணிக்கும் 10 வித்தியாசமான குணாம்சம் கொண்ட மனிதர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் திரையரங்கில் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் இந்த படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இதுபற்றி பகிர்ந்துள்ள இயக்குனர் சிம்புதேவன் “உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு எங்களது “போட்” திரைப்படம் வருகிற அக்டோபர் 1 செவ்வாய்க்கிழமை அமேசான் பிரைமில் (prime video)வெளியாகிறது. அனைவரும் பார்த்து மகிழவும் ” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!