தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தற்போது தமிழில் ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 34 வயதாகும் அனிருத் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறனின் மகள் காவ்யா மாறனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அனிருத் மறுத்திருந்தார்.
ஆனால் இப்போது இருவரும் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி மீண்டும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. அவர்கள் இருவரும் டேட் செய்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.