விஜய் டிவியில் விரைவில் தொடங்கவுள்ள 'பிக் பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியில், 'ஹார்ட் பீட்' என்ற இணைய தொடரில் நடித்து வரும் நடிகர் ரோஷன் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில், சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா, நடனக் கலைஞர் ஜன்மோனி டோலி, பாக்கியலட்சுமி தொடர் புகழ் நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் புவியரசு, நடிகர் உமர், நடிகை பாடினி குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஹார்ட் பீட்' இணையத் தொடரில், பாடினி குமார் ஏற்கனவே ஒரு போட்டியாளராக பங்கேற்கலாம் என கூறப்பட்ட நிலையில், அதே தொடரில் இளம் வயது விஜய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷனும் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கிறார். மாடலாகவும் நடிகராகவும் அறியப்பட்ட ரோஷன், 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.