இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்த ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான கூலி படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் இன்று படம் வெளியான முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தும் அது படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கூலி திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் சுமார் 320 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.