Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னைக்கோ ஒரு நாள் நான் ‘field out’ ஆவேன்… அன்னைக்கு…?- அனிருத் எமோஷனல் பேச்சு!

Advertiesment
அனிருத்
, திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (09:59 IST)
தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

தற்போது தமிழில் ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 34 வயதாகும் அனிருத் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வருகிறார். அவர் இசையில் உருவாகி வரும், சிவகார்த்திகேயன் –முருகதாஸ் கூட்டணியின் ‘மதராஸி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு அனிருத் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

அவரது பேச்சில் “சிவாவோடு இது எனக்கு எட்டாவது படம். நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தோம். என்னுடைய முதல் ஹிட் ‘எதிர்நீச்சல்’ படம்தான். என்னைக்கோ ஒருநாள் நான் சினிமாவில் இருந்து ‘field out’ ஆவேன். ஆனால் அன்று சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை நினைத்து நான் பெருமைப்படுவேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!