நடிகர் விஷாலின் 35-வது திரைப்படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மத கஜ ராஜா படத்திற்கு பிறகு விஷால் மற்றும் அஞ்சலி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈட்டி திரைப்படத்தை இயக்கிய ரவி அரசு இந்த புதிய படத்தை இயக்குகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அருமை நண்பர் விஷாலுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. இந்த அற்புதமான படக்குழுவுடன் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விஷால் மற்றும் அஞ்சலி நடிப்பில் கடந்த 2013-ல் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.