Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கரை அடுத்து அல்போன்ஸ் புத்ரனுக்குக் கதை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (14:22 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  8 ஆண்டுகளாக அவர் எந்த படமும் இயக்காமல் கடைசியில் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் இயக்கிய கிஃப்ட் என்ற திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அந்த படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், இந்த படத்துக்கான கதையை கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்துக்குக் கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments