தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏ எல் விஜய். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வரிசையாக படங்களை இயக்கி வருபவர். இவர் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற படத்தை உருவாக்கினார்.
இதையடுத்து மீண்டும் கங்கனாவை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் கங்கனா தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனதால் அந்த படம் தற்போது கிடப்பில் உள்ளது. இதற்கிடையில் அனுஷ்காவை வைத்தும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அதை பற்றி வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை.
இந்நிலையில் இப்போது விஜய் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.