Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னைப் பொதுவெளியில் அவமதிக்க உங்களுக்கு அனுமதி இல்லை… இயக்குனர் அல்போன்ஸின் ஆதங்கம்

Advertiesment
என்னைப் பொதுவெளியில் அவமதிக்க உங்களுக்கு அனுமதி இல்லை… இயக்குனர் அல்போன்ஸின் ஆதங்கம்
, திங்கள், 23 ஜனவரி 2023 (15:36 IST)
நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் இயக்கியுள்ள கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்த திரைப்படம் எந்தவித ப்ரமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் மிகவும் எதிர்பார்த்த இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பி வருகின்றன.

இதையடுத்து ட்ரோல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அல்போன்ஸ் தன்னுடைய முகநூல் பதிவில் “உங்கள் திருப்திக்காக என்னை ட்ரோல் செய்து என்னைப் பற்றியும் எனது கோல்ட் படத்தைப் பற்றியும் தவறாகப் பேசினால்... அது உங்களுக்கு நல்லது. எனக்கானது அல்ல. அதனால் என் முகத்தை இணையத்தில் காட்டாமல் இருக்கிறேன். நான் உங்கள் அடிமை இல்லை. என்னை கிண்டல் செய்யவோ, பொது இடங்களில் அவமதிக்கவோ நான் உரிமை கொடுக்கவில்லை. எனவே நீங்கள் விரும்பினால் எனது படைப்புகளைப் பாருங்கள். என் பக்கம் வந்து உங்கள் கோபத்தை காட்டாதீர்கள்.

நீங்கள் அவ்வாறு செய்தால், நான் இணையத்தில் கண்ணுக்கு தெரியாதவனாக மாறிவிடுவேன். நான் முன்பு போல் இல்லை. நான் முதலில் எனக்கு உண்மையாக இருப்பேன், பின்னர் என் மனைவி மற்றும் என் குழந்தைகள் மற்றும் என்னை மிகவும் விரும்பும் மற்றும் நான் கீழே விழும்போது என் அருகில் நின்றவர்களுக்கு உண்மையாக இருப்பேன். நான் கீழே விழுந்தபோது உங்கள் முகத்தில் எழுந்த சிரிப்பை என்னால் மறக்க முடியாது. யாரும் வேண்டுமென்றே விழுவதில்லை. இது இயற்கையாக நடக்கும். எனவே அதே இயற்கையே என்னைத் துணையாகக் காக்கும். இந்த நாள் இனிதாகட்டும்” எனக் கூறியுள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிராஜோடு சத்யராஜ் இனைந்து நடித்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?