Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் துணிவு… தாய்லாந்து ஷுட்டிங் பற்றி வெளியான முக்கிய தகவல்!

அஜித்தின் துணிவு… தாய்லாந்து ஷுட்டிங் பற்றி வெளியான முக்கிய தகவல்!
, சனி, 8 அக்டோபர் 2022 (08:53 IST)
அஜித்தின் 61 ஆவது படமான துணிவு திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.


அஜித் 61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பின் பலனாக நேற்று படத்தின் தலைப்பு ‘துணிவு’ என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டரும் வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டரும் தலைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. ஒரு மாதம் அங்கு நடக்கும் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் முடிகிறது. இதையடுத்து படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பாங்காங் ஷூட்டிங் முடியும் என்று தெரியவந்துள்ளது. அதோடு படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது பாடலை எண்ணற்ற முறைக் கேட்கிறேன்…” கலைஞர்களை வாழ்த்தி சீமான் ட்வீட்