Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுவர்தன் இயக்கும் தமிழ் படத்தில் அதிதி ஷங்கர்?

விஷ்ணுவர்தன் இயக்கும் தமிழ் படத்தில் அதிதி ஷங்கர்?
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:32 IST)
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அவர் அதன் பின்னர் பல படங்களை இயக்கினாலும் எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் அஜித்துக்காக எழுத்தாளர் பாலகுமாரனோடு இணைந்து ஒரு வரலாற்றுக் கதையை எழுதி வைத்திருந்தார். ஆனால் ஏனோ அந்த படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லையாம்.

சமீபத்தில் அவர் தமிழில் அதர்வாவின் தம்பியை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது அவர் இயக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதிதி ஷங்கர் விருமன் படத்துக்குப் பிறகு இப்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் ப்ரஸ்மீட்… நானே வருவேன் படத்தை சீண்டிய பார்த்திபன்!