Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தின் பேட்டி எல்லாம் இல்லை. வாசகர்களை ஏமாற்றிய பிரபல ஊடகம்!

Advertiesment
ajith
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (13:11 IST)
நேற்றைய முன்னணி இதழ் ஒன்றின் விளம்பரத்தில் அஜித் அந்த இதழுக்கு பேட்டி கொடுப்பது போல விளம்பரம் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் பேட்டி கொடுத்திருக்கிறார் என்பது அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அந்த இதழை வாங்கிப் படித்தனர். ஆனால் அந்த இதழில் அஜித் குறித்து அவரது நண்பர்கள் கூறியது, அவரது பைக் குழுவினர் கூறியது மட்டுமே உள்ளது என்றும் அஜீத் பேட்டி கொடுக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அஜீத் பேட்டி கொடுப்பது போல ஒரு தலைப்பையும் புகைப்படத்தை வெளியிட்டு வாசகர்களை ஏமாற்றியுள்ளதாக வாசகர்களின் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன 
 
அஜித் கடந்த பல வருடங்களாக எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காத நிலையில் அந்த குறிப்பிட்ட இதழுக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்பதும் அந்த இதழ் கற்பனையாகவே ஒரு கட்டுரை எழுதி இருப்பதாகவும் பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இசை படைப்புகளுக்கு ஜி.எஸ்.டி? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 6.79 கோடி அபராதம்! – ஜிஎஸ்டி ஆணையர் விளக்கம்!