Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

வெற்றியைத் தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம்… ஆதிக்குக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!

Advertiesment
அஜித்

vinoth

, திங்கள், 14 ஏப்ரல் 2025 (09:39 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது.

முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் இந்த படம் சுமார் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும், உலகளவில் வசூல் 150 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் இன்றும் படத்துக்கு நல்ல வசூல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் “படம் வெளியானதும் அஜித் சாரிடம் பேசினேன். அவர் ”படம் பிளாக்பஸ்டர். ஆனால் அதை தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். தோல்வி வந்தாலும் அதை வீட்டுக்கு எடுத்து செல்லாதீர்கள். தொடர்ந்து பணிபுரியுங்கள்’ எனக் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பிரிட் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கவுள்ள பிரபாஸ்… படப்பிடிப்பு தாமதம்!