தற்போது AI சம்பந்தப்பட்ட காட்சிகளை சினிமாவில் உருவாக்க வேண்டும் என்றால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்தியாவிலேயே AI ஸ்டுடியோவை பிரபல தயாரிப்பாளருக்கு தில் ராஜூ தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே நான்காம் தேதி இந்த ஸ்டூடியோ திறக்கப்பட உள்ளதாகவும் இந்த ஸ்டூடியோவில் நடைபெறும் பணிகள் குறித்த முழு விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த கோட் உள்பட பல படங்களில் AI காட்சிகளை உருவாக்க அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே வசதி உள்ளது. கோட் படத்திற்கு கூட விஜய் தனது டீஏஜிங் காட்சிகளுக்கா அமெரிக்கா சென்றார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த வாரிசு படம் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த தில் ராஜு இந்தியாவிலேயே AI ஸ்டுடியோவை ஆரம்பிக்கும் முயற்சியை எடுத்துள்ளார். அவருடைய முயற்சியின் காரணமாக இனிமேல் AI சம்பந்தப்பட்ட காட்சிகளை இந்தியாவிலே உருவாக்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஷாருக்கானின் ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனமும் AI சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.