Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ஆண்டனியின் இரண்டு படத்தையும் கைப்பற்றிய பிரபல தொழிலதிபர்!

Advertiesment
Kagana Margan

vinoth

, செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (15:23 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். அவர் இசையமைக்கும் குத்துப் பாடல்கள் ரசிகர்களுக்கு வேற லெவல் ‘vibe’ கொடுத்தன.

இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.

தற்போது அவர் சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். ககனமார்க்கன் படத்தை பிரபல படத்தொகுப்பாளரான லியோ ஜான் பால் இயக்குகிறார். சக்தி திருமகன் படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த இரண்டு படத்தையும் துபாயில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான கண்ணன் ரவி பார்த்துவிட்டு அவருக்கு படம் பிடித்ததால் வாங்கி வெளியிடுகிறாராம். இவர் ஏற்கனவே சாந்தணு நடித்த ‘ராவண காவியம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேங்கர்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?.. வெளியான தகவல்!