Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

Advertiesment
sekar babu

Siva

, புதன், 16 ஏப்ரல் 2025 (18:18 IST)
ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் ’கராத்தே பாபு’ என்ற படத்தை இயக்குனர் கணேஷ் பாபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியானது.
 
அதில் ரவி மோகன் எம்எல்ஏ கேரக்டரிலும், நாசர் முதலமைச்சர் கேரக்டரிலும், எதிர்கட்சி தலைவர் கேரக்டரிலும் கே.எஸ்.ரவிகுமாரும் நடித்திருந்தனர் என்பதும், இந்த டீசர் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்தது.
 
இந்த டீசர் வெளியானவுடன், அமைச்சர் சேகர்பாபு போன் செய்து, ரவி மோகன் கேரக்டர் தன்னுடைய கதை போல் இருக்கிறது என்று கூற, “இல்லை சார், இது கராத்தே பாபுவின் கதை,” என்று இயக்குனர் கூறினாராம். அப்போது சேகர்பாபு, “அந்த கராத்தே பாபுவே நான்தான்,” என்று சொன்னது, இயக்குனர் இன்ப அதிர்ச்சி அடைந்ததாகவும், அதன் பின்னர் படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும், ரவி மோகன் சமிபத்தில் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சியின்போது பேசினார்.
 
இதை அவர் கூறும் போது, அதே நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!