‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

Mahendran
புதன், 26 நவம்பர் 2025 (13:29 IST)
முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த நடிகை கெளசல்யா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான 'கார்த்திகை தீபம்' தொடரில் இணைந்துள்ளார்.
 
'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தளபதி விஜய் உடன் 'பிரியமுடன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகு, 'சுந்தரி', 'அலைபாயுதே' போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
 
டி.ஆர்.பி.யில் முன்னணியில் உள்ள 'கார்த்திகை தீபம்' தொடரின் இரண்டாவது பாகத்தில், கெளசல்யா ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
கார்த்திக் ராஜு, ஆர்த்திகா, ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடிக்கும் இத்தொடரில் கெளசல்யாவின் வருகை, ரசிகர்களின் கவனத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

தொடர் சர்ச்சையாகும் பேச்சு.. தேவயானியின் கணவருக்கு என்ன ஆச்சு?

மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கும் பிரபுதேவா… ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments