2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை வாரி எடுத்துக்கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அவரின் தாய் மொழியான மலையாளத்தில் அவர் பெரிதாகப் படங்கள் நடிக்கவில்லை.
சமீபத்தில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மலையாள சினிமா தன்னை ஓரம்கட்டியதாகப் பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள பரதா என்ற படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கி பேசியுள்ளார். அதில் “படத்தில் நான் நடித்தக் கதாபாத்திரம் என்றென்றும் மறக்க முடியாதது. இந்த கதாபாத்திரத்துக்காக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் அது எளிதாக இல்லை.” என்று பேசிக்கொண்டிருந்த போதே கண்கலங்கி அழ ஆரம்பித்தார்.