வாழை படத்தின் இமாலய வெற்றிக்குப் பின்னர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.
படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.