நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

Mahendran
புதன், 19 நவம்பர் 2025 (16:17 IST)
நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
திரையுலகில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டவர் பிரேம்ஜி அமரன். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர், கடைசியாக விஜய்யின் 'தி கோட்' திரைப்படத்திலும், இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கித் தயாரித்த 'வல்லமை' திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
 
இந்த நிலையில், பிரேம்ஜிக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக, 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா உறுதிப்படுத்தியுள்ளார்.
 
47 வயதில் தந்தையாகி இருக்கும் பிரேம்ஜிக்கு, திரையுலகை சேர்ந்த நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

அடுத்த கட்டுரையில்
Show comments