'டான்' படத்தின் வெற்றியைத் தந்த நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிபி சக்கரவர்த்தி கூட்டணி மீண்டும் இணைகிறது என்பது தெரிந்ததே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 22 அல்லது 23 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் நடிக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இதற்காக சத்யஜோதி நிறுவனம் வெங்கட் பிரபுவுக்கு மகாலிங்கபுரத்தில் தனியாக ஓர் அலுவலகத்தை ஒதுக்கி, 'பிரீ-புரொடக்ஷன்' வேலைகளை தொடங்கியுள்ளது.
இயக்குனர்கள் சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இரண்டு இயக்குனர்களுமே சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களை இயக்க தயாராக இருக்கும் நிலையில் இரு படங்களுக்கும் மாறி மாறி சிவகார்த்திகேயன் கால் சீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த இரு படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த இரு படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.