இவருக்கு எங்கிருந்து எப்படி அறிமுகம் செய்வது என தெரியவில்லை. பிரபல இசையமைப்பாளரின் மகனா? இல்ல, பிரபல இயக்குனரின் தம்பியா? அல்லது இவரே ஒரு பிரபலமான நடிகரா என்று எப்படி ஆரம்பிப்பது. ஆம். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவத்தை அமைத்துக் கொண்டவர் இசையமைப்பாளர் கங்கை அமரன். இவருடைய இசையில் பல பாடல்கள் வெளி வந்தாலும் இளையராஜா அளவுக்கு அந்த உயரத்தை இவரால் அடையமுடியவில்லை.
கரகாட்டக்காரன் படம் மட்டுமே இவருடைய சிறந்த படைப்புக்கு சான்று. கிட்டத்தட்ட 200 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம்தான் கரகாட்டக்காரன். அந்தப் படத்தின் இயக்குனர்தான் கங்கை அமரன். இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் திரைத்துறையில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு. இன்னொருவர் நடிகரும் பாடகருமான பிரேம்ஜி.
பிரேம்ஜி நீண்ட வருடங்களாகவே சிங்கிளாவே இருந்தார். கடந்தாண்டு ஜுன் மாதம் தான் இவருக்கு திருமணம் நடந்தது. இந்து என்ற பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜி ரொம்பவே மாறிவிட்டார் என்று அவருடைய திரையுலக நண்பர்கள் கூறி வந்தனர். அதற்கு முன்பு வரை பேச்சுலர் பார்ட்டி, இரவு நேரங்களில் வெளியில் சுற்றுவது என மிகவும் ஜாலியாகவே இருந்தார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு பொட்டிப்பாம்பாகவே அடங்கி போனார். ஆனால் பிரேம்ஜியும் அவரது மனைவி இந்துவும் சேர்ந்து அவ்வப்போது ஜாலியாக வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வந்தனர். திருமணம் செய்த சில மாதங்களில் இந்து கர்ப்பமாக அவருக்கு வளைகாப்பும் நடந்தது. அந்த வளைகாப்புக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில்தான் பிரேம்ஜிக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரேம்ஜி தத்தளித்து வருகிறார். அவருக்கு திரையுலக நண்பர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.