அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

Bala
புதன், 19 நவம்பர் 2025 (16:12 IST)
எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர் நடிகர் மன்சூர் அலிகான். அதுவும் சமுதாயத்தில் எங்கேயாவது எப்போதாவது அநீதி நடந்தாலும் அதை தைரியமாக தட்டி கேட்பவரும் மன்சூர் அலிகான். இவரை பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் மேலும் அந்த அநீதி நடக்காமல் இருக்க என்ன செய்யணுமோ அதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்.
 
சமீபத்தில் கூட தேர்தலில் எஸ்.ஐ.ஆர் படிவத்திற்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். எஸ்.ஐ.ஆர்-ஆல் என்னென்ன குழப்பங்கள் இருக்கிறது என தன்னுடைய அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை கூட்டி அது பற்றிய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் மன்சூர் அலிகான். அந்த கூட்டத்தில் பெண் நிருபர் ஒருவர் சம்பந்தமே இல்லாமல் பிக்பாஸ் குறித்து கேள்வியை கேட்டார்.
 
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் போராட்டம் நடத்துராரே? அதைப் பற்றி என்ன நினைக்குறீங்கனு கேட்டார். உடனே மன்சூர் அலிகான், இப்ப எதுக்கு இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறேன்? நீங்க என்ன கேள்வி கேட்குறீங்க? அந்த கருமத்தை ஏன் நீங்க பாக்குறீங்க? ஏதோ பன்னிங்க சேத்துல விழுந்து புரழுதுங்க. அவங்க என்ன வேண்டுமானாலும் பண்ணட்டும். கட்டிப்புடிக்கட்டும், முத்தம் கொடுக்கட்டும்.
 
அந்த கருமத்தை ஏன் பாக்குறீங்க? அந்த நேரத்துல நல்ல சீரியல் பாருங்க. படத்தை பாருங்க. அதை விட்டு? என மிகவும் கடுப்பாகி பேசினார் மன்சூர் அலிகான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இந்த சீசன் மோசமான வரவேற்பையே பெற்றிருக்கிறது. அதற்கேற்ப அந்த சீசனில் யாரையெல்லாம் வெளியேற்றணுமோ திட்டம் போட்டு வெளியேற்றிய மாதிரி தான் இருக்கிறது.
 
இனிமேலாவது பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவும் முதன் முறையாக கணவன் மனைவியாக பிரஜனும் சாண்ட்ராவும் உள்ளே நுழைய இவர்களுக்குள் ஏதாவது பெருசா சண்டை வருமா என்றும் காத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான ஆடையில் கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனின் புகைப்படத் தொகுப்பு!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆகும் பேரரசு..!

3000 கோடி ரூபாய் சொத்தை வேண்டாம் என சொன்ன ஜேசி சான்… ஜாக்கி சான் பெருமிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments