Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!

வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
, வெள்ளி, 1 ஜூலை 2022 (10:01 IST)
பிரசாந்த், வடிவேலு நடித்து ஹிட் அடித்த வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் பிரசாந்த் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் பிரசாந்த். 90களில் பிரபலமான நடிகராக இருந்தவர் பல காலமாக படம் ஏதும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் முழுமூச்சாக படம் நடிப்பதில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் நடித்து இவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள “அந்தகன்” படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்ததாக இவர் நடித்து ஹிட்டான வின்னர் படத்தின் இரண்டாம் பாகமும் தொடங்க உள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார் பிரசாந்த்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “விரைவில் அந்தகன் ரிலீஸாக உள்ளது. வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும். ரசிகர்கள் எப்போதும் என் மீது அன்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1500 திரைகளில் இன்று முதல் ஹரியின் ‘யானை’…. அருண்விஜய்யின் பிரம்மாண்ட ரிலீஸ்?