Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறாரா நாசர்?

Advertiesment
சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறாரா நாசர்?
, வியாழன், 30 ஜூன் 2022 (23:11 IST)
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் நாசர். இவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் அறிமுகம் செய்யபப்ட்டார்.

அதன்பின், முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கரக்டர்களின் அவர் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர் நடிகர், டப்பிங் கலைஞர், பேச்சாளர், என  பன்முகம்கொண்டவர். இவர் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தலைவராகப் பொறுப்பேற்று வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், சினிமாவில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

ஆனால், இவை எல்லாம் வதந்திகள் எனவும், தற்போது நாசர், வெப் சீரிஸில் நடித்து வருவதாகவும்  கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் இயக்குனர் படத்தில் விஞ்ஞானியாக நடிக்கும் சூர்யா !