Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1500 திரைகளில் இன்று முதல் ஹரியின் ‘யானை’…. அருண்விஜய்யின் பிரம்மாண்ட ரிலீஸ்?

1500 திரைகளில் இன்று முதல் ஹரியின் ‘யானை’…. அருண்விஜய்யின் பிரம்மாண்ட ரிலீஸ்?
, வெள்ளி, 1 ஜூலை 2022 (09:21 IST)
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.

அருண் விஜய் முதல் முறையாக அவருடைய அக்கா கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார். இந்நிலையில் யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது.

ஆனால் ஜூன் 17 ல் இருந்து மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்ததால் ரிலீஸ் ஜூலை 1 க்கு தள்ளிவைக்கப் பட்டு இன்று ரிலீஸ் ஆகிறது. யானை படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ‘யானை’ ரிலீஸ் ஆகிறது. 1500 திரைகளில் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

KGF பட நடிகர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து… அவரே வெளியிட்ட பதிவு