போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

Webdunia
புதன், 25 ஜூன் 2025 (11:07 IST)
போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவர விசாரணைத் தொடங்கியது.

கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் விசாரணையில் போதைப் பொருள் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில் இன்னொரு நடிகரான கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்டது. நடிகர் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரரும் கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்தவருமாவார்.

இந்நிலையில் அவரை விசாரிக்க போலீஸார் அவர் வீட்டுக்கு சம்மன் அளிக்க சென்ற போது அவர் வீட்டில் இல்லையாம். இதையடுத்து அவர் உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர் ஆகவேண்டுமென வீட்டில் உள்ளவர்களிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கேரளாவுக்குத் தப்பித்து ஓடியுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து நடிகர்கள் இந்த வழக்கில் சிக்குவதால் போதை பொருள் பயன்படுத்தும் சினிமா பிரபலங்களின் பட்டியல் அதிகமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments