Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

vinoth
புதன், 25 ஜூன் 2025 (10:39 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்நிலையில் இப்போது அந்த பெரிய பட்ஜெட் படத்தை சிம்புவே தன்னுடைய ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இது சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிம்புவும் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க சென்றுள்ளார். இதனால் தேசிங் பெரியசாமி ஒரு குறுகிய கால படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறாரா ரவி மோகன்?

திரையரங்கில் படுதோல்வி… தாமதமாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘கண்ணப்பா’!

காந்தாரா 2 வில் வில்லியே இவர்தானா?.... ரிஷப் ஷெட்டியோடு மோதும் ருக்மிணி வசந்த்!

சிவகார்த்திகேயன்& முருகதாஸ் கூட்டணியின் மதராஸி முன்பதிவில் சுணக்கம்… என்ன காரணம்?

அஜித் கேட்ட சம்பளத்தால் கைவிடப் பட்டதா ‘மங்காத்தா 2’?

அடுத்த கட்டுரையில்
Show comments