வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் அரசன். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் புரோமோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்தான் வெளியிட்டார். இந்த புரோமோவின் ஹைலைட்டே வீடியோவில் தனுஷ் பற்றி சிம்பு பேசிய அந்த டையலாக்தான். அதாவது இந்த கதையெல்லாம் தனுஷுக்குத்தான் சரியாக இருக்கும் என சொல்லியிருப்பார்.
இதிலிருந்தே சிம்புவும் தனுஷும் சினிமா துறையில் எப்படி போட்டியில்லாமல் நட்பாக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த புரோமோ திரையரங்குகளில்தான் முதலில் வெளியானது. அந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து பெருத்த உற்சாகத்தில் இருந்தார்கள். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா என பல முக்கிய பிரபலங்களும் நடிக்க இருக்கிறார்கள்.
இந்தப் படம் வடசென்னையில் நடக்கும் ஒரு குண்டர் கும்பல் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதன் முறையாக அனிருத்தும் சிம்புவும் இந்தப் படத்தின் மூலம் இணைகிறார்கள். தனுஷ் அனிருத் காம்போதான் ரசிகர்களை மிகவும் ஈர்த்த கூட்டணியாக இருந்து வந்தது. அந்த வகையில் அரசன் படத்தில் சிம்புவுக்காக எப்படியும் தன் பெஸ்ட்டை அனிருத் கொடுப்பார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அரசன் திரைப்படத்தை பற்றி நடிகர் கவின் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது அரசன் படத்தை பற்றி எனக்கு முழுமையாக எல்லாமே தெரியும். அது ஒரு தரமான படம். அது கண்டிப்பாக வெற்றிமாறன் ரசிகர்களையும் சிம்பு ரசிகர்களையும் அனிருத் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக அமையும். அதே நேரம் நான் அனிருத் சிம்பு கூட்டணியில் உருவாகப்போகும் இந்தப் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கவின் கூறியிருக்கிறார்.
அவர் சொன்னதை போல வடசென்னை படத்தின் சாயலை ஒத்து இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை படத்தின் ஒரு கேரக்டர் பற்றிய படமாகத்தான் இது உருவாகப்போகிறது என்றும் சொல்லப்படுகிறது. புரோமோவில் சிம்புவின் இன்னொரு முகத்தையும் நாம் பார்க்க முடிந்தது. அதனால் சிம்பு கெரியரில் இந்தப் படம் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.