Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

சிகிச்சைக்குப் பின் களத்துக்கு வந்த கார்த்திக்… அதிமுகவுக்கு பிரச்சாரம்!

Advertiesment
Tamilnadu
, சனி, 27 மார்ச் 2021 (08:52 IST)
நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்போது அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் கார்த்திக். தற்போது வயது காரணமாக படங்களில் நடித்து வருவதை தவிர்த்து வரும் அவர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். மேலும் இந்த தேர்தலில் அவரின் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தது. இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக நடிகர் கார்த்திக் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சிகிச்சை முடிந்த நிலையில் இப்போது கார்த்திக் மீண்டும் பிரச்சாரக் களத்துக்கு வர ஆரம்பித்துள்ளார். அதிமுகவுக்காக இப்போது அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி…. ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்!