Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதயநோய் வருவதை தடுக்குமா. ...எள்ளில் உள்ள சத்துக்கள் ..?

இதயநோய் வருவதை தடுக்குமா. ...எள்ளில் உள்ள சத்துக்கள் ..?
, சனி, 27 மார்ச் 2021 (00:12 IST)
வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். 
 
முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் தீரும். இதை சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது. 
 
உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. உடலில் ஏதேனும் நோய் உள்ளோர், மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
 
எள்ளில் துத்தநாகம் நிறைந்து காணப்படுவதால், உடலில் கொலாஜன் கட்டுமானத்தை ஊக்குவிக்கிறது. மற்றும் தோல் சுருக்கத்தில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.
 
மாதவிடாய் பிந்தைய பெண்களுக்கு எள் நல்லது. ஏனெனில் அதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும்  சமப்படுத்துகின்றன.
 
எள்ளில் உள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளடக்கம் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. நல்லெண்ணெய்யில், 'சீசேமோலின்' எனும் வேதிப் பொருள்  நிறைந்துள்ளது. எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும்போது, இதயத்திற்கு பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. 
 
நல்லெண்ணெய்யை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது. நல்லெண்ணெய்யில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவுகிறது.  அதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெய் சாப்பிடுவது, நல்ல பலனை தரும். 
 
தினமும் காலையில், நல்லெண்ணெய்யால் வாயை கொப்பளித்தால், சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தொற்று ....இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு !