தமிழ் சினிமாவில் முகமூடி படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கலையரசன். ஆனால் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த மெட்ராஸ் படம். அந்த படத்தில் அவர் நடித்த அன்பு கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
அதன் பின்னர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திரம் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் கலந்துகட்டி நடித்து வருகிறார். ஆனால் அவரால் கதாநாயகனாக ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்க முடியவில்லை.
இந்நிலையில் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் சாதிய ஒதுக்குதல் குறித்து பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “தமிழ் சினிமாவில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் பாகுபாடு மோசமாக உள்ளது. நான் இயக்குனர் பா ரஞ்சித்துடன் நெருக்கமாக இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இயக்குனர்கள் என்னை நடிக்க அழைக்க யோசிக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.