Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ்க்கை என்னவென்று உணரவிரும்பினல்… இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

Advertiesment
தமிழ் சினிமா

vinoth

, செவ்வாய், 8 ஜூலை 2025 (11:52 IST)
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இயக்குனர் ராமின் பறந்து போ படம்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பறந்து போ. இயக்குனர் ராமின் வழக்கமான சீரியஸ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி, நகைச்சுவை அம்சம் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தற்காலப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அழுத்தம் மற்றும் அதிலிருந்து வெளியேறுவது குறித்த படமாக உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் முதல் நான்கு நாட்களில் சுமார் 3.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை நடிகர் நயன்தாரா சிலாகித்துப் பாராட்டியுள்ளார். அதில் “இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி வாழ்க்கை என்பதை உணர விரும்பினால், குழந்தைகளோடு மலையேறுங்கள், ஏரியில் நீந்தி விளையாடுங்கள். அல்லது குழந்தைகளை ராம் சாரின் “பறந்து போ” படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். வாழ்க்கையில் நமது தேவைகள் மற்றும் நாம் இழப்பவற்றை இந்த படம் தெளிவாகக் காட்டுகிறது. நான் பார்த்த இனிமையான படங்களில் ஒன்று. இயக்குனர் ராம் ஒரு சிறந்த இயக்குனர். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அடுத்த படம் யாருடன்… இறுதிப் பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!