முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வந்துள்ளார் என்பதும் பிரபலமான தொடரான "க்யூங்கி சாஸ் பி கபி பஹு தி" என்ற தொடரின் 25 ஆண்டுகள் நிறைவை அடுத்து இதன் மறுபதிப்பு ஜூலை 29, 2025 அன்று இரவு 10:30 மணிக்கு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அசல் முன்னணி நடிகர்களுடன் இந்த பிரபலமான தொடரை ஏக்தா கபூர் மீண்டும் கொண்டு வந்துள்ளார். இது ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்மிருதி இரானி மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்புவதைக் கண்டு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அவரது கேரக்டரில் ஃபர்ஸ்ட்லும் போஸ்டர் ஏற்கனவே இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் நீண்ட அரசியல் பயணத்திற்கு பிறகு, ஸ்மிருதி இரானி மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள் நிலையில் அவர் ஒரு நாளைக்கு ரூ.14 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியத் தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் மாறியுள்ளார்.
இதே தொடரில் ஸ்மிருதி இரானி, 2000களின் முற்பகுதியில் நடித்தபோது ஒரு நாளைக்கு வெறும் ரூ.1,800 மட்டுமே சம்பளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.