Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் கலைப்புலி ஜி சேகரன் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

Advertiesment
கலைப்புலி ஜி சேகரன்

vinoth

, திங்கள், 14 ஏப்ரல் 2025 (10:18 IST)
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மற்றும் விநியோகஸ்தர் என பல பரிமாணங்களில் பணியாற்றியவர் கலைப்புலி ஜி சேகரன். இந்நிலையில் நேற்று அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை விநியோகஸ்தராக தொடங்கியவர் ஜி சேகரன். அதன் பின்னர் தயாரிப்பாளர் தாணுவுடன் இணைந்து ‘கலைப்புலி பிலிம்ஸ்’ என்ற  தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார். அவர் தயாரித்த ‘யார்’ என்ற சூப்பர் ஹிட் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உள்ளிட்ட ஐந்து படங்களையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவில் தீவிரமாக இயங்கவில்லை. விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருந்தபோது சிறு பட்ஜெட் படங்களின் ரிலீஸில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துடன் இன்னொரு படமா?... ஆதிக் ரவிச்சந்திரனின் பதில்!