தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் முருகதாஸ், சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி ரிலீஸ் செய்ய அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தற்போது அவர் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இறுதி கட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.