Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

Advertiesment
Vidaamuyarchi car accident

Prasanth Karthick

, ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (16:31 IST)

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் ஆரவ், ஷூட்டிங்கில் நடந்த விபத்து குறித்து பேசியுள்ளார்.

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் அந்த பட ஷூட்டிங்கின்போது நடந்த கார் விபத்தின் வீடியோ முன்னதாக வைரலாகியிருந்தது. அன்று என்ன நடந்தது என்று நடிகர் ஆரவ் பேசியுள்ளார்.

 

அதுகுறித்து ஆரவ் பேசியபோது “அன்று கார் ஸ்டண்ட்காக அப்க்ரேட் செய்யப்பட்ட கார் ஒன்றை கொண்டு வந்தனர். அதை அஜித் சார் லைட்டாக ஓட்டி பார்த்தபோதே காரின் கண்ட்ரோல் குறித்து சந்தேகமாக பேசினார். என்றாலும் அந்த காரை ஓட்டி ஷூட்டிங் நடந்தது. அதில் ரோட்டில் காரை வளைத்து வளைத்து ஓட்ட வேண்டும். அப்படி ஓட்டும்போது ஒரு இடத்தில் நிலைத்தடுமாறி கார் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

 

அஜித் சார் இதுபோல கார் நிறைய ஓட்டி பயிற்சி உள்ளவர் என்பதால் விபத்தானதும் ஆவர் பேனிக் ஆகவில்லை. ஷூட்டிங்கிறாக எனது கைகள், கழுத்து கட்டப்பட்டிருந்ததால் உடனே அவர் என்னை பார்த்து ‘ஆர் யூ ஓகே.. ஆர் யூ ஓகே’ என கேட்டார். படக்குழுவினர் வருவதற்குள் கண்ணாடியை உடைத்து நொடிக்குள் வெளியேறினார். மற்றவர்களும் அதற்குள் வந்துவிடவே அவர்களும் கதவை உடைத்து என்னை வெளியேற்றினார்கள்.

 

அஜித் சார் எவ்வளவோ கார்கள் ஓட்டி தன்னந்தனியாக விபத்தை சந்தித்திருக்கிறார். ஆனால் அன்று கூட நான் இருந்தபோது அவ்வாறு விபத்தானது அவரை மிகவும் கஷ்டப்படுத்தியது. அவரிடம் ‘சார் எனக்கு ஒன்னும் இல்லை சார்.. நான் ஆல்ரைட்.. ஷூட்டிங் போகலாம்’ என்றேன்.

 

அதற்கு என்னை திட்டிய அஜித் சார், முதலில் நீங்கள் ஹாஸ்பிடல் போங்கள் என்று உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தார். உடன் வேலை செய்பவர்கள் விஷயத்தில் அவர் காட்டும் கவனம் என்னை ஆச்சர்யப்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!