அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாகிறது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இயக்குனர் மகிழ் திருமேனி படம் என்ன மாதிரியாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு தொடர்ந்து தகவல்களைக் கொடுத்து வருகிறார். அதில் “படத்தில் பன்ச் வசனங்கள் இருக்காது. அதே போல பிரம்மாண்டமான கதாநாயக அறிமுகக் காட்சி இருக்காது. மாஸ் இடைவேளைக் காட்சி இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக படம் அனைவரும் திருப்தியடையும்படி மிகச்சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் இப்போது படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதன்படி படம் U/A 16+ சான்றிதழைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் படத்தைப் பார்க்கலாம். அதற்குக் கீழுள்ளவர்கள் பெற்றோர்கள் வழிகாட்டுதலோடு இந்தப் படத்தைப் பார்க்கலாம்.