Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

Advertiesment
இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

Siva

, ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (13:33 IST)
70 வயது பாடகர் ஒருவர் இசை நிகழ்ச்சியின் போது இளம் பெண் ஒருவருக்கு லிப் கிஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் உள்பட பல மொழிகளில் பாடிய பாடகர் உதித் நாராயணன், சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். அப்போது பல இளம் பெண்கள் அவரிடம் வந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு இளம் பெண் மட்டும் செல்பி எடுத்துவிட்டு அவருக்கு முத்தம் கொடுத்தார். இவரும் பதிலுக்கு அந்த இளம் பெண்ணுக்கு லிப் கிஸ் முத்தம் கொடுத்தார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பாடகர் உதித் நாராயணனுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. "70 வயது பாடகர் இளம் பெண்ணுக்கு லிப் கிஸ் கொடுப்பதா?" என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் எழுந்தன.

இதுகுறித்து விளக்கம் அளித்த பாடகர், "எனக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் ஏற்படும் அன்பு தூய்மையானது. இதில் எந்தவிதமான அசிங்கமும், அருவருப்பும் இல்லை. இது ஒரு தூய்மையின் வெளிப்பாடுதான்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இதை தவறாக புரிந்து கொண்டவர்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதே நேரத்தில், இந்த விவகாரம் என்னை மேலும் பிரபலமாக வைத்துவிட்டது. அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!