Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆமிர்கானின் மகாபாரதம் படத்தில் அல்லு அர்ஜுன்.. எந்த வேடம் தெரியுமா?

vinoth
செவ்வாய், 13 மே 2025 (10:01 IST)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வணிக ரீதியானப் படங்கள் மற்றும் கதையம்சம் உள்ள படங்கள் என இரண்டிலும் மாறி மாறி நடிக்கக் கூடிய ஒரு நடிகர். அதே நேரம் சினிமா வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர்.

தற்போது அவர் நடிப்பில் ‘சித்தாரே ஜமீன் பார்’ என்ற திரைப்படம் உருவாகி ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. இன்னும் 10 வருடங்கள் மட்டுமே சினிமாவில் இருப்பேன் எனக் கூறியுள்ள அமீர்கான், அந்த 10 வருடங்களையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஆமீர்கான் தன்னுடையக் கனவுப் படைப்பான மகாபாரதம் படத்தைப் பல பாகங்களாக எடுக்கும் முடிவிலும் உள்ளார். இதன் முதல் பாகத்தை இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க அல்லு அர்ஜுனிடம் அமீர்கான் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீலாம்பரி போல கால் மேல் கால் போட்டு ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட்!

விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்திலும் அதை செய்திருக்கிறேன்… முருகதாஸின் செண்ட்டிமெண்ட் பலன் கொடுக்குமா?

காந்தாரா 2 படத்துக்கு நூறு கோடி ரூபாய் விலை சொல்லும் தயாரிப்பாளர்கள்… தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி!

KGF புகழ் தினேஷ் மங்களூரு காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments