Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முன்பே ‘ட்ரெய்ன்’ படத்தின் கதையை சொன்ன மிஷ்கின்!

vinoth
செவ்வாய், 13 மே 2025 (09:54 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார்.

மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு டிடெக்டிவ்வாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் இன்னும் ஓடிடி மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின் ‘டிரெய்ன்’ படத்தின் கதை என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “ஒரு புழு எப்படி தன்னுடைய குழந்தைகளை சுமந்துகொண்டு ஊர்ந்து செல்கிறதோ, அப்படி ஒரு ரயில் மனிதர்களை சுமந்துகொண்டு செல்கிறது. வாழவே விருப்பம் இல்லாமல் முடிவைத் தேடி செல்லும் கதாநாயகனின் வாழ்க்கையை எப்படி அந்த பயணம் மாற்றுகிறது என்பதுதான் ஒரு வரிக்கதை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மற்றும் ஜோதிகா கோபித்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன் – ட்ரோல் குறித்து சந்தானம்!

இயக்குனர் ராம் &மிர்ச்சி சிவா கூட்டணியின் ‘பறந்து போ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கில்லிக்குப் பிறகு சச்சின்தான்… ரி ரிலீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments